இந்தியா

பார்வையற்றை பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் செய்த முன்னாள் போலிஸ் மகன் : சித்தூரில் நடந்த கொடூரம்!

பார்வை மாற்றுத்திறனாளியான இளம்பெண்ணை முன்னாள் போலிஸின் மகன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சித்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

பார்வையற்றை பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் செய்த முன்னாள் போலிஸ் மகன் : சித்தூரில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திராவின் சித்தூர் நகரின் கொண்டமிட்டா பகுதியைச் சேர்ந்தது பாதிக்கப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளியின் குடும்பம். அந்த இளம்பெண்ணின் தந்தை நீண்ட நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

பாதிக்கப்பட்டவரின் குடியிருப்புக்கு அருகில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை தலைமைக் காவலரின் மகன் சின்னா என்கிற ஜெயச்சந்திரா ரெட்டி கேபிள் ஆபரேட்டராக பணிபுரிகிறார்.

இந்த ஜெயச்சந்திரா பார்வையற்ற பெண்ணிடம் கடந்த ஓராண்டாக பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இப்படி இருக்கையில், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து நுழைந்த ஜெயச்சந்திரா பார்வைத் தெரியாத அப்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் திஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே தப்பியோடிய ஜெயச்சந்திரா ஜெட்டிங் கொட்டாய் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக சித்தூர் திஷா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிமோகன் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை காவல் துறையைச் சேர்ந்தவர் என்பதால், வழக்கை தவறாக வழிநடத்தும் வாய்ப்பு இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறினார். உயரதிகாரிகள் தலையிட்டு தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories