இந்தியா

காதலுக்கு தடையாக இருந்த மருமகளின் முகத்தை சிதைத்த மாமியாரின் காதலன்: கேரளாவில் நடந்த பயங்கரம்!

வைஷ்ணவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு அவரது மாமியாரால் நடந்த கொடுமைகள் குறித்து விரிவாக பதிவிட்டு காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்திருக்கிறார்.

காதலுக்கு தடையாக இருந்த மருமகளின் முகத்தை சிதைத்த மாமியாரின் காதலன்: கேரளாவில் நடந்த பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருமணத்தை மீறிய உறவில் இருந்த மாமியாரின் செயலை கண்டித்து கேள்வி கேட்ட மருமகளை மாமியாரின் காதலன் கொடூரமாக தாக்கிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரும்பாவூரைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண் சிவில் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பலப்பள்ளி முழிக்குளம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் வைஷ்ணவிக்கு திருமணம் நடந்தது.

திருமணமான பிறகு மாமியார் வீட்டில் இருந்தபடியே கல்லூரிக்கு போய் வந்தார் வைஷ்ணவி. இப்படி இருக்கையில், மாமியார் அம்மா குமாரிக்கும், அதேப்பகுதியைச் சேர்ந்த 3 கிமீ தொலைவில் உள்ள சுதிஷ் என்பவருக்கும் காதல் உறவு இருப்பதை அறிந்திருக்கிறார் வைஷ்ணவி.

மருமகள் வீட்டில் இருக்கும் போதே தனது காதலனை வீட்டுக்கு அழைத்து வருவதை மாமியார் வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். இதனையடுத்து மாமியாரிடம் சண்டையிட்டிருக்கிறார் வைஷ்ணவி. பின்னர் காதலன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் வைஷ்ணவியை அறையில் வைத்து பூட்டியிருக்கிறார் அந்த மாமியார்.

குடிக்க தண்ணீர் கேட்டால் கூட கழிவறையில் இருக்கும் நீரை எடுத்து குடித்துக்கொள்ளும்படி கூறியிருக்கிறாராம் அம்மா குமாரி. இப்படி இருக்கையில் அண்மையில் வீட்டுக்கு வந்த மாமியாரின் காதலனை வழிமறித்து வைஷ்ணவி கேள்வி கேட்டதோடு உள்ளே வர மறுத்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வைஷ்ணவியின் முகத்திலேயே பலமாக குத்தி காயமடையச் செய்திருக்கிறார். இதனால் நிலைக்குலைந்துப் போயிருக்கிறார் வைஷ்ணவி. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதனையடுத்து வைஷ்ணவியின் கணவரும் முகேஷும் நடந்த கொடூரம் குறித்து போலிஸாரிடம் புகாராக கொடுத்திருக்கிறார். இதுபோக, வைஷ்ணவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு அவரது மாமியாரால் நடந்த கொடுமைகள் குறித்து விரிவாக பதிவிட்டு காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories