இந்தியா

“இது அப்பட்டமான ‘Copy Paste’ பட்ஜெட்” : பா.ஜ.கவின் ‘குஜராத் மாடல்’ வெற்று பிம்பத்தை உடைத்த ஹர்திக் படேல்!

குஜராத் மாநிலத்தின் இந்தாண்டு பட்ஜெட்டுக்கும் கடந்த ஆண்டு பட்ஜெட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என ஹர்திக் படேல் குற்றம்சாட்டியுள்ளார்.

“இது அப்பட்டமான ‘Copy Paste’ பட்ஜெட்” : பா.ஜ.கவின் ‘குஜராத் மாடல்’ வெற்று பிம்பத்தை உடைத்த ஹர்திக் படேல்!
Santosh Hirlekar
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜ.க ஆளும் மாநிலமான குஜராத்தின் வளர்ச்சியை பெரும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக காண்பித்து வாக்குச் சேகரிக்கும் உத்தியை பா.ஜ.க தொடர்ச்சியாக செய்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க தாக்கல் செய்த பட்ஜெட் கடந்தாண்டில் தாக்கல் செய்த பட்ஜெட் போலவே இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல், “குஜராத் மாநிலத்தின் இந்தாண்டு பட்ஜெட்டுக்கும் கடந்த ஆண்டு பட்ஜெட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இது கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டை காபி பேஸ்ட் செய்து புதிதுபோல் கொடுத்துள்ளனர். மாநிலம் முழுவதும் வேலை இல்லாமல் பல இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories