இந்தியா

“திடீரென நேருக்கு நேர் வந்த விமானம்.. 10 விநாடிகள் தாமதித்திருந்தாலும்..”: நூலிழையில் உயிர் தப்பிய மம்தா!

நான் நூலிழையில் உயிர் தப்பியதாக மேற்கு வங்க முதல்வர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“திடீரென நேருக்கு நேர் வந்த விமானம்.. 10 விநாடிகள் தாமதித்திருந்தாலும்..”: நூலிழையில் உயிர் தப்பிய மம்தா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான கடைசிக் கட்ட பிரச்சாரத்திற்காக சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர், பிரச்சாரத்தை முடித்து விட்டு உத்தர பிரதேசத்திலிருந்து தனி விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு மம்தா பானர்ஜி திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சென்ற மினாம் குலுங்கியுள்ளது. இதனால் அவருக்கு சேலாசன காயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதில், “நான் சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென மற்றொரு விமானம் எனது விமானத்தை நோக்கி நேராக வந்தது.

இன்னும் 10 விநாடிகள் இந்த இரண்டு விமானங்களும் தங்கள் வழியிலேயே பயணம் செய்திருந்தால் இரண்டும் நேருக்கு நேர் மோதி பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால், தான் பயணம் செய்த விமான தனது புத்தி கூர்மையால் உடனே விமானத்தை வேறு வழியில் திருப்பினார். இதன் காரணமாக சுமார் 6 ஆயிரம் அடிக்குக் கீழே விமானம் வேகமாக இறங்கியது.

இந்த திடீர் மாறுதல் காரணமாக விமானம் குலுங்கியது. இதில் தனக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த சம்பவம் குறித்து ஒன்றிய போக்குவரத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories