இந்தியா

பெண்களுடன் பொழுதை கழிக்க கொள்ளையனாக மாறிய முதியவர்.. திருடர் குல திலகம் சிக்கியது எப்படி?

பூட்டிய வீடுகளில் குறிவைத்துக் கொள்ளையடித்து வந்த முதியவரை போலிஸார் கைது செய்தனர்.

பெண்களுடன் பொழுதை கழிக்க கொள்ளையனாக மாறிய முதியவர்.. திருடர் குல திலகம்  சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள லே அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனதாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முதியவர் ஒருவர் பூட்டிய வீட்டிலிருந்து வெளியே செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது.

பின்னர் அந்த முதியவரை போலிஸார் தேடிவந்த நிலையில் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

கைதான முதியவர் பெயர் ரமேஷ். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதையடுத்து மூன்றாவதாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

இதனை அறிந்த அவரது மனைவிகள் முதியவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதையடுத்து சொகுசாக வாழ ஆசைப்பட்டுப் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நகை மற்றும் பணங்களை திருடி வந்துள்ளார். இந்த பணத்தில் பெண்களுடன் மகிழ்ச்சியாக இருந்துவந்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டிலும் இதுபோன்று கொள்ளை அடித்துவந்துள்ளார். இது தொடர்பாக அவரை நான்கு முறை போலிஸார் அவரை கைது செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில்தான் பெங்களூருவில் கொள்ளையடித்து வந்தநிலையில் போலிஸாரிடம் முதியவர் சிக்கியுள்ளார்.

banner

Related Stories

Related Stories