இந்தியா

”97% மார்க் எடுத்தும் இங்கு மருத்துவம் படிக்கமுடியவில்லை” -உக்ரைனில் பலியான இந்திய மாணவனின் தந்தை பேட்டி!

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவனின் தந்தை அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

”97% மார்க் எடுத்தும் இங்கு மருத்துவம் படிக்கமுடியவில்லை” -உக்ரைனில் பலியான இந்திய மாணவனின் தந்தை பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேட்டோ நாடுகளுக்கான அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.

ரஷ்யாவின் இந்த படையெடுப்பை எதிர்த்து உக்ரைனும் தொடர்ந்து போராடி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.

குண்டு மழையில் இருந்து தப்பிக்க மக்கள் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கையில், ரஷ்யாவில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் 14 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த நகரின் வெளிப்பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் முகாமிட்டு உள்ளனர்.

அப்போது கார்கிவ் நகருக்குள் ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்ததால் அவர்களுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் சண்டையிட்டனர். அப்போது கார்கிவ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள எரிவாயு குழாயை ரஷ்ய படையினர் குண்டு வைத்து தகர்த்தனர். கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் உயிரிழந்து இருக்கலாம் என AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மருத்துவ மாணவனும் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தி வெளியானதில் இருந்து உக்ரைனில் படிக்கச் சென்றிருக்கும் தங்களது பிள்ளைகள் குறித்த கவலை இந்திய பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில், உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் தந்தை ANI செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், தனது மகன் 97% மதிப்பெண் பெற்றிருந்தும் கர்நாடகாவில் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சீட்டுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் உக்ரைன் போன்ற வெளிநாடுகளில் இதே படிப்புக்கு குறைவான செலவில் கற்றுத் தரப்படுகிறது.” எனக் கூறியிருக்கிறார்.

முன்னதாக, பிரதமர் மோடி இந்திய மாணவர்களை இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories