இந்தியா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பேருந்து சேவை - புதுச்சேரி தி.மு.கவினர் அசத்தல்!

புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவையை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பேருந்து சேவை - புதுச்சேரி தி.மு.கவினர் அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை புதுச்சேரி மாநிலம் முழுவதும் தி.மு.கவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தை போல் புதுச்சேரிலும் மகளிருக்கு இலவச பேருந்து சேவை திட்டம் கொண்டு வரப்படும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், மணவெளி தொகுதி தி.மு.க பொறுப்பாளர் ராஜாராம், செயற்குழு உறுப்பினர் இளங்கோ மற்றும் சண்முகம் ஏற்பாட்டின் பேரில் இன்று ஒரு நாள் முழுவதும், புதுச்சேரியில் இருந்து பாகூர் பகுதிக்கு தனியார் பேருந்தில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பேருந்து சேவை - புதுச்சேரி தி.மு.கவினர் அசத்தல்!

இதனை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில தி.மு.க. அமைப்பாளருமான இரா.சிவா தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் பயணம் செய்தார். மேலும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், சம்பத், அன்பால் கென்னடி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் இதேபோல் இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதேபோல, புதுச்சேரி ஏம்பலம் தொகுதியில் 500 க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா வழங்கினார். அப்போது மாற்று கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தி.மு.கவில் இணைந்தனர்.

banner

Related Stories

Related Stories