இந்தியா

அப்பாவை கொன்று விடுவேன் என மிரட்டி வன்கொடுமை செய்த காமுகன்: சிறுமியின் வாக்குமூலத்தால் நீதிபதி அதிர்ச்சி!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காகரம் செய்த வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அப்பாவை கொன்று விடுவேன் என மிரட்டி வன்கொடுமை செய்த காமுகன்: சிறுமியின் வாக்குமூலத்தால் நீதிபதி அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த 2018 ஆம் ஆண்டு அதேப்பகுதியை சேர்ந்த செப்டிக் டேங்க் தூய்மை செய்யும் தொழிலாளி மணிகண்டன் (30) என்பவர் கத்தியைக் காட்டி கடத்திச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருபுவனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மூன்று நாட்களுக்கு பின்னர், சிறுமியை மீட்டு அவரை கடத்தி சென்ற மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் சிறுமியை சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மணிகண்டன் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கடந்த 3.5 ஆண்டுகளாக புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி வாதங்கள் நடைபெற்றது. அப்போது சிறுமியின் தந்தையைக் கொலை செய்து விடுவேன் என மணிகண்டன் கூறி, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்ததை அடுத்து தலைமை நீதிபதி செல்வநாதன் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.

banner

Related Stories

Related Stories