இந்தியா

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை.. விசாரித்த பெண் காவலர் மீதும் தாக்குதல் நடத்தி அடாவடி!

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகையை போலிஸார் கைது செய்தனர்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை.. விசாரித்த பெண் காவலர் மீதும் தாக்குதல் நடத்தி அடாவடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையைச் சேர்ந்தவர் காவ்யா தாப்பர். நடிகையான இவர் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மார்கெட்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு கார் ஓட்டிச்சென்றபோது, மாரியாட் ஓட்டல் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியுள்ளார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மது போதையில் இருந்ததால் நடிகை காவ்யா தாப்பர் போலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அங்கிருந்த பெண் போலிஸார் ஒருவரின் சட்டையைப் பிடித்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி நடிகையை காவ்யா தாப்பரை காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories