இந்தியா

அதிவேகத்தில் வந்த சரக்கு ரயில்.. தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய இஸ்லாமிய இளைஞர்! (Video)

தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுமியை இஸ்லாமிய இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகத்தில் வந்த சரக்கு ரயில்.. தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய இஸ்லாமிய இளைஞர்! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பர்கேடி பகுதியைச் சேர்ந்தவர் தச்சர் முகமது மெஹபூப். இவர் நேற்று முன் தினம் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக சென்றுக்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த ரயில் பாதையை கடப்பதற்காக காத்திருந்தார்.

அப்போது அவ்வழியாக பெற்றோருடன் வந்த குழந்தையை ஒன்று தவறு ரயில் தண்டவாளப் பாதையில் விழுந்துள்ளார். அதேநேரத்தில் அப்பகுதியில் அதிவேகத்தில் சரக்கு ரயில் ஒன்றும் வந்துக்கொண்டிருந்தது.

சிறுமி கீழே விழுந்ததைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் கூச்சலிட்டவே, அருகில் நின்றிருந்த முகமது மெஹபூப் சற்றும் யோசிக்காமல் துணிச்சலுடன் தண்டவாளத்திற்கு நடுவில் சிறுமியை இழுத்தார்.

மேலும் தண்டவாளத்தில் இருந்த சிறுமி, பயத்தில் தலையை தூக்கிவிடக்கூடாது என்பதற்காக தலையை நன்றாக அழுத்தி பிடித்துக் கொண்டார். பின்னர் ரயில் தண்டவாளத்தின் நடுவில் படுத்துக்கொண்ட இருவர் மீது ரயில் மோதாமல் கடந்தது சென்றது.

தனது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தண்டாவளத்திற்குள் குறித்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய முகமது மெஹபூவின் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி முகமது மெஹபூவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories