இந்தியா

“உ.பி கேரளமாக மாறினால்.. மத, சாதி வன்முறையால் யாரும் பலியாக மாட்டார்கள்”: யோகிக்கு பினராயி சுளீர் பதிலடி!

உ.பி கேரளமாக ஆகுமானால், அங்கே, சிறந்த கல்வி, சுகாதாரச் சேவை, சமூக நலத்திட்டங்கள், உயர்ந்த வாழ்க்கைத் தரம் உறுதி செய்யப்படும் என யோகி ஆதித்யநாத்க்கு பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

“உ.பி கேரளமாக மாறினால்.. மத, சாதி வன்முறையால் யாரும் பலியாக மாட்டார்கள்”: யோகிக்கு பினராயி சுளீர் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று (பிப் 10-ஆம் ) முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாகத் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆளும் பா.ஜ.கவிற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் உ.பியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருவதால் பா.ஜ.கவிற்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டாமல் சட்ட மேலவை உறுப்பினராக இருந்துவரும் யோகி ஆதித்யநாத் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கோரக்பூர் தொகுதில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரையின் ஒருபகுதியாக காணொலி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் நேற்றைய தினம் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள வீடியோவில், “வரும் தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கவில்லை என்றால், உத்தர பிரதேசம் கேரளா அல்லது மேற்கு வங்கமாக மாறிவிடும்” எனத் தெரிவித்திருந்தார்.

யோகி ஆதித்யநாத் தோல்வி பயத்தில் இருப்பதாகவும், இந்தமுறை பா.ஜ.க ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என அங்குள்ள இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கேளர முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் அஞ்சுவது போல், உ.பி கேரளமாக ஆகுமானால், அங்கே... சிறந்த கல்வி, சுகாதாரச் சேவை, சமூக நலத்திட்டங்கள், உயர்ந்த வாழ்க்கைத் தரம் மற்றும் நல்லிணக்க வாழ்வு உறுதி செய்யப்படும்.

மக்கள் யாரும் மத, சாதி வன்முறையால் உயிரிழக்க மாட்டார்கள். உத்தர பிரதேச மக்கள் விரும்புவதும் அதுவாகத்தான் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் எம்.பியும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கண்டித்து விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “பா.ஜ.க ஆட்சிக்கு வராவிட்டால், காஷ்மீர், வங்காளம் மற்றும் கேரளாவாக மாறும் என்று யோகி ஆதித்நாத் கூறுகிறார். அவ்வாறு நடந்தால், உ.பி மக்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, காஷ்மீரின் அழகும், வங்காளத்தின் கலச்சாரமும் மற்றும் கேரளாவின் கல்வியும் கிடைக்கும். இது உ.பிக்கு அற்புதமானதே!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories