இந்தியா

டிராவல் பேக்கில் வைத்து இளம்பெண்ணை ஹாஸ்டலுக்குள் கொண்டு செல்ல முயன்ற மாணவர்... வைரலாகும் வீடியோ!

பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர் ஒருவர் தன் காதலியை பெரிய டிராவல் பேக்கில் உள்ளே வைத்து தன் அறைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

டிராவல் பேக்கில் வைத்து இளம்பெண்ணை ஹாஸ்டலுக்குள் கொண்டு செல்ல முயன்ற மாணவர்... வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர் ஒருவர் தன் காதலியை பெரிய டிராவல் பேக்கில் உள்ளே வைத்து தன் அறைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

கல்லூரி விடுதியின் கேட் அருகே விடுதி பாதுகாவலர்கள் சந்தேகமடைந்து அந்தக் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவரின் டிராவல் பேக்கை சோதனையிட முயன்றனர். அப்போது அந்த மாணவர் எடுத்துக் கொண்டு ஓட முயன்றுள்ளார்.

அவரைத் தடுத்து நிறுத்தி அந்த ட்ராவல் பேக்கை திறந்து சோதனை செய்ய முயல்கையில் அந்த பேக்கில் இருந்து ஒரு இளம்பெண் வெளியில் வந்துள்ளார். அவர் அந்தப் பெண்ணை காவலர்களுக்குத் தெரியாமல் தனது அறைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது பிடிபட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இருப்பினும், இந்த வீடியோ 2019 முதல் இணையத்தில் உள்ளதாகத் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் இதைப் பற்றி வேடிக்கையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories