இந்தியா

”பெரியார், அண்ணா, கலைஞரின் கவலையை போக்கிய ராகுல் காந்தி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுத்து எழுச்சியூட்டிய ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.

”பெரியார், அண்ணா, கலைஞரின் கவலையை போக்கிய ராகுல் காந்தி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பு நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகான நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தின் போது குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது.

அப்போது காங்கிரஸின் மூத்தத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மோடி ஆட்சியில் இரண்டு இந்தியாக்கள் உள்ளன. பணக்கார இந்தியா, ஏழை இந்தியாவாகும்.

பணக்காரர்கள் செல்வந்தர்களாகவும், 3 கோடி இளைஞர் வேலையில்லாமல் உள்ளனர். புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்கவிட்டாலும், இருக்கிற வேலை இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்கும் இல்லை. மாநிலங்களின் ஒன்றியம் என்றே இந்தியா நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்படுகிறது. பா.ஜ.க தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது. நீங்கள் என்ன கனவு கண்டாலும் சரி உங்களால் அதை சாதிக்கவே முடியாது” என பேசியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெருமளவில் பேசுபொருளானது. இப்படி இருக்கையில், தமிழ்நாட்டுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், “இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நின்றுகொண்டு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை , இந்த இனத்தின் பெருமையை மிகச் சிறந்த சொற்களால் இந்திய நாட்டுக்கே அறிவித்த ஆருயிர்ச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தனித்தன்மையும் பண்பாடும் அறநெறியும் கொண்ட தமிழ்ப்புலத்தின் பெருமையை அகில இந்தியத் தலைவர்கள் உணரவில்லையே என்றுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் வருந்தினார்கள். அக்கவலையைப் போக்கும் வகையில் ராகுல் காந்தி அவர்களின் பேச்சு அமைந்துள்ளது.

இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் தமிழ்நெறி செல்லட்டும்! சகோதரர் ராகுல் காந்தியின் உரத்த சிந்தனைக்கு உணர்வுப்பூர்வமான நன்றிகள்!” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் ட்விட்டர் பதிவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி “உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இந்தியாவின் பன்மைத்துவ, கூட்டாட்சி தத்துவத்தின்படி நமது நம்பிக்கை வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories