இந்தியா

பிரச்சாரத்திற்கு வந்த கன்னையா குமார் மீது ஆசிட் வீச்சு?.. உ.பி தேர்தலில் அரங்கேறும் கொடூரம்!

தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த கன்னையா குமார் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரத்திற்கு வந்த கன்னையா குமார் மீது ஆசிட் வீச்சு?.. உ.பி தேர்தலில் அரங்கேறும் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக இருந்தவர் கன்னையா குமார். இவர் கல்லூரி காலத்திலிருந்தே பா.ஜ.க அரசின் மக்கள் விரோத திட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசிவந்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த கன்னையாகுமார் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதையடுத்து உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக கன்னையா குமார் லக்னோ வந்துள்ளார். பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் அவர் மீது ஆசிட் வீசியுள்ளனர். மேலும் அவர் உடன் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் மீதும் ஆசிட் பட்டுள்ளது.

இந்த ஆசிட் தாக்குதலில் கன்னையா குமாரின் உயிரி தப்பியதாகக் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆட்சி வீசிய மர்ம நபர்களை தொண்டர்கள் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உ.பி போலிஸார் கூறுகையில், "தேர்தல் பிரச்சாரத்திற்கு லக்னோ வந்த கன்னையா குமாருக்கு எதிராகப் பலர் கோஷமிட்டனர். அப்போது தேவன்ஷ் பாஜ்பாய் என்பவர் அவர் மீது மை வீசியுள்ளார். இது ஆசிட்டா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories