இந்தியா

“பா.ஜ.கவை அதிகாரத்திலிருந்து அகற்றி வங்கக் கடலில் எறிவோம்” : தெலங்கானா முதல்வர் காட்டம்!

பா.ஜ.கவை தூக்கி வங்கக் கடலில் எறிய வேண்டும் என தெலங்கானா முதல்வர் காட்டமாகப் பேசியுள்ளார்.

“பா.ஜ.கவை அதிகாரத்திலிருந்து அகற்றி வங்கக் கடலில் எறிவோம்” : தெலங்கானா முதல்வர் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

2022 - 2023ஆம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்துப் பேசிய, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதலமைச்சருமான சந்திரசேகர ராவ், “ஒன்றிய பா.ஜ.க அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கோல்மால் பட்ஜெட்.

இந்த பட்ஜெட் சாமானிய மக்களை கடும் விரக்தியில் ஆழ்த்தி உள்ளது. விவசாயிகள் மற்றும் சாமானியர்களுடன், எஸ்.சி - எஸ்.டி - மற்றும் பி.சி. உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும் பட்ஜெட் கடும் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் தெளிவின்மையோடு இருக்கிறது. ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாட்டின் விவசாயம் மற்றும் கைத்தறி துறைக்கு இந்த பட்ஜெட் ஒரு பெரிய பூஜ்ஜியம்.

இந்த பட்ஜெட் சிறு வணிகர்களுக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது. சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சியை பட்ஜெட் புறக்கணித்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பா.ஜ.கவை அதிகாரத்திலிருந்து அகற்றி வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும். அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்கமாட்டோம். நாட்டுக்கு எது தேவையோ அதைச் செய்வோம்” என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories