இந்தியா

நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 5 பேர் பலி - மண் சரிவில் சிக்கிய மற்ற தொழிலாளர்களின் நிலை என்ன?

ஜார்க்கண்ட்டில் நிலச்சரிவு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 5 பேர் பலி - மண் சரிவில் சிக்கிய மற்ற தொழிலாளர்களின் நிலை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வந்துள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு நிலக்கரி வெட்டும் பணி நேற்று நடந்துள்ளது.

முதலில் நேற்று மாலை கபசரா அவுட்சோர்சிங் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்து கோக்கிங் கோல் லிமிடெட் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று காலை கோபிநாத்பூர் திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்தினால் வேலையில் ஈடுபட்டிருந்த அனைத்து தொழிலாளர்களும் மண் சரிவில் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த கொடூர விபத்து பற்றி அறிந்து பேரிடர் மீட்புக்குவினர் அங்கு சென்று தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது அவரை 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் மண் சரிவில் எவ்வளவு பேர் சிக்கிக் கொண்டுள்ளனர் என்ற தகவலும் முழுமையாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், "நிலச்சரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் இந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள வேண்டும். காயமடைந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories