இந்தியா

கோவாவை தொடர்ந்து உத்தரகண்டிலும் பலத்த அடி.. கட்சி மாறும் தலைவர்களால் பறிதவிக்கும் பா.ஜ.க - பின்னணி என்ன?

உத்தரகண்ட் தேர்தலில் சீட் கிடைக்காததால் பா.ஜ.க தலைவர்கள் பலரும் கட்சி மாறி வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவை தொடர்ந்து உத்தரகண்டிலும் பலத்த அடி.. கட்சி மாறும் தலைவர்களால் பறிதவிக்கும் பா.ஜ.க - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசம், கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவித்ததை அடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காதவர்கள் கட்சி மாறி வருவதால் 5 மாநில தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், கோவா, உத்தரகண்ட மாநிலங்களில் மீண்டும் தேர்தலில் சீட் கிடைக்காத பா.ஜ.க தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடம் 59 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இதில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் 10 பேருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

அதேபோல், காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.கவேல் சேர்ந்த பலருக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூத்த தலைவர்கள், மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காத சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சீட் கிடைக்காத பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் முன்னி தேவிஷா, "எனது தொகுதியில் பா.ஜ.க அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்றனர். ஆனால் பா.ஜ.க தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்காமல், காங்கிரஸ் கட்சியைப் பின்னணியாகக் கொண்டவருக்குச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க தலைமையின் இந்த முடிவு கட்சி தொண்டர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளேன்" என தெரிவித்துள்ளார். அதேபோல் மகாவீர் ராங்கட் என்ற பா.ஜ.க எம்.எல்.ஏவும் சுயேச்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து சீட் கிடைக்காத பா.ஜ.க தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் சேரப்போவதாகவும், சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாகவும் அறிவித்து வருகின்றனர். இவர்களின் இந்த முடிவால் உத்தரகண்ட் பா.ஜ.க தலைமைக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories