இந்தியா

CoWIN வலைதளத்தில் இருந்து தகவல் திருட்டு ? : பரபரப்பு புகார் - உண்மை நிலவரம் என்ன?

கோவின் வலைதளத்தில் இருந்து மக்களின் தகவல்கள் கசிந்து வருவதாக வெளியான செய்திக்கு ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

CoWIN வலைதளத்தில் இருந்து தகவல் திருட்டு ? : பரபரப்பு புகார் - உண்மை நிலவரம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா பரவியதை அடுத்து, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் வசதிக்காகக் கோவின் என்ற வலைதளத்தி ஒன்றிய அரசு உருவாக்கி அறிமுகப்படுத்தியது.

இதையடுத்து, கோவின் வலைதளத்திப் பயன்படுத்தி பொதுமக்கள் பலரும் தங்களின் விவரங்களை அதில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும் இந்த வலைதளத்தில் எப்போது தடுப்பூசி செலுத்தப்பட்டது, எந்த இடத்தில் போடப்பட்டது. அவர்களின் பெயர் என்ன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இதில் பதிவாகும்.

இந்நிலையில், கோவின் வலைதளத்தில் இருந்து 20 ஆயிரம் பேரின் தகவல்கள் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால் பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்த செய்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவின் வலைதளத்தில் இருந்து யாருடைய தகவல்களும் கசியவில்லை. அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக உள்ளது. பொதுமக்கள் யாரும் தங்களின் முகவரியையோ அல்லது பரிசோதனை முடிவுகளையோ பதிவு செய்ய வேண்டியதில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories