இந்தியா

சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை.. கணவனே கொன்றது அம்பலம் - போலிஸ் விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

தவறான உறவு காரணமாக வங்கதேச நடிகையை அவரது கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை.. கணவனே கொன்றது அம்பலம் - போலிஸ் விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ரைமா இஸ்லாம் ஷமு. பிரபல நடிகையான இவர் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் திடீரென காணாமல் போனர். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து நடிகை ரைமா இஸ்லாமின் மர்ம மரணம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. நடிகை ரைமா இஸ்லாமுக்கும், தனியார் தொலைக்காட்சி அதிகாரிக்கும் நீண்ட நாட்களாகத் தவறான உறவு இருந்துள்ளது.

இதனால் அவரது கணவர் ஷகாவத் அலி மனைவியைப் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து அவருடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷகாவத் அலி மனைவியை வெட்டி கொலை செய்து, அவரது உடலைச் சாக்கு மூட்டையில் அடைத்து ஹஸ்ரத்பூர் பாலம் அருகே வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் ஷகாவத் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories