உலகம்

எதிரெதிரே மோதிய கார்கள்.. பெரும் விபத்தில் சிக்கிய அர்னால்டு - 2 பேர் படுகாயம் : நடந்தது என்ன? (Photos)

அர்னால்டு சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் சாகச ஹீரோ என்றால் அது அர்னால்டுதான். டெர்மினேட்டர் படத்தின் மூலம் தனக்கேன தனி ரசிகர் பட்டாளத்தையே பெற்றவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர். இன்றைக்கும் இவர் நடிக்கும் படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

66 வயதை எட்டிய அர்னால்டுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் குறையவே இல்லை. இந்நிலையில் அர்னால்டு சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ப்ரென்ட்வுட்டின் சாலையில் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் கலிபோர்னியா ஆளுநர் GMC யூகோனின் காரை அவரது ஓட்டுநர் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

எதிரெதிரே மோதிய கார்கள்.. பெரும் விபத்தில் சிக்கிய அர்னால்டு - 2 பேர் படுகாயம் : நடந்தது என்ன? (Photos)

அப்போது எதிரே வந்த வாகனமும் யூகோனின் வாகனமும் கட்டுப்பாட்டை இழந்து எதிரெதிரே மோதியது. இதில் அதேவழியில் சென்றுகொண்டிருந்த அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் காரும் நிலை தடுமாறி விபத்துக்குள்ளான கார் மீது மோதி, அதன் மீது ஏறி கவிழ்ந்தது.

சீட் பெல்ட் அணிந்திருந்தால் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கார் விபத்தில் பெண் ஒருவருக்கும் தலையில் பலத்த காயமும், ஓட்டுநருக்கு லேசனான காயமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பெண்ணை நேரில் சந்திக்க அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அம்மாகாண மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner