உலகம்

“காதலுக்காக கிட்னியை இழந்தேன்.. ஆனா..” : புலம்பிய காதலன் - வைரலான வீடியோ : பின்னணி என்ன?

தனது காதலியின் தாய்க்கு கிட்னியை தானமாக அளித்த ஒரே மாதத்திற்குள் காதலி வேறொரு நபரை திருமணம் செய்துவிட்டதாக காதலன் புலம்பி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

“காதலுக்காக கிட்னியை இழந்தேன்.. ஆனா..” : புலம்பிய காதலன் - வைரலான வீடியோ : பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தனது காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த ஒரே மாதத்திற்குள் காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு நபரை திருமணம் செய்துவிட்டதாக காதலன் புலம்பி வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மெக்சிகோவைச் சேர்ந்த காதலர் ஒருவர் தனது காதலை வெளிக்காட்டும் விதமாக தனது சிறுநீரகத்தை காதலியின் தாயாருக்கு தானமாக அளித்து அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார். ஆனால் ஒரே மாதத்தில் அவரது காதலி வேறு நபரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதாக புலம்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மெக்ஸிகோவைச் சேர்ந்த Uziel Martinez என்ற ஆசிரியர் தான் புலம்பித் தவிக்கும் அந்த காதலர். இவர் தனக்கு நேர்ந்தவை குறித்து டிக் டாக்கில் வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார். அதில், “எனது காதலியின் தாயாருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்தேன். ஆனால் நான் தானம் அளித்த ஒரு மாதத்துக்குள் என்னை ஏமாற்றிவிட்டு என் காதலி வேறு நபரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார்” என அவர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவை 14 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கின்றனர். அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். மேலும், காதலியை அவர் பொதுவெளியில் அவமதித்துவிட்டதாகச் சாடியுள்ளனர்.

இதனால் தர்மசங்கடமடைந்த Uziel Martinez மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது காதலி மீது தனக்கு வெறுப்பு ஏதும் கிடையாது. இந்த வீடியோ இத்தனை பேர் பார்க்கும் வகையில் பிரபலமடையும் என நான் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories