இந்தியா

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை.. மாணவிக்கு நடந்த கொடூரம் - பின்னணி என்ன?

டெல்லியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை.. மாணவிக்கு நடந்த கொடூரம் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் உயர் கல்வி படித்து வருகின்றனர். இந்நிலையில், பிச்.டி மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திலேயே மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்களன்று இரவு பாதிக்கப்பட்ட மாணவி, பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மாணவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், அவரை அருகே இருந்த புதருக்குள் இழுத்துச் சென்று ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவியின் சத்தம் கேட்டு அந்த மர்ம நபர் அவரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து மாணவி ஆடைகள் கிழிந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories