இந்தியா

ஜன.,31 துக்க நாள் ; பிப்.,1 முதல் மிஷன் உ.பி. : மீண்டும் போராட்டத்தில் இறங்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

ஜனவரி 31ஆம் தேதி நாடு முழுவதும் விவசாயிகளை ஏமாற்றிய துரோக நாளாக கடைப்பிடிக்கப்படும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜன.,31 துக்க நாள் ; பிப்.,1 முதல் மிஷன் உ.பி. : மீண்டும் போராட்டத்தில் இறங்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க அரசுக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் இறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 முதல் மிஷன் உ.பி எனும் பெயரில் பாஜகவின் பொய் வாக்குறுதிகளை அம்பலப்படுத்தும் பிரச்சாரங்களைத்தொடங்கவும், ஒன்றிய அமைச்சரை நீக்காததைக் கண்டித்து லக்கிம்பூர் கேரியில் காலவரையறையற்ற போராட்டத்தை தொடங்கப் போவதாகவும் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்ற பிறகு குறைந்த பட்ச ஆதார விலை வழங்குவது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை. வழக்குகள் கைவிடப்படவில்லை. உயிரிழந்தோருக்கு நிவாரணம் தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

லக்கிம்பூர் கொலையில் தொடர்புடைய அமைச்சர் தற்போதும் மோடி அமைச்சரவையில் உள்ளார். இதனை சுட்டிக்காட்டியுள்ள விவசாயிகள் பாஜக அரசைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories