இந்தியா

கால்வாயில் இருந்து மேலே வரமுடியாமல் சறுக்கி விழுந்த யானைக் கூட்டம்.. வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தண்ணீர் குடிக்கவந்து கால்வாயில் மாட்டிக்கொண்ட யானைகள் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கால்வாயில் இருந்து மேலே வரமுடியாமல் சறுக்கி விழுந்த  யானைக் கூட்டம்.. வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் ஹன்சூரில் நாகரஹோளே தேசிய பூங்கா உள்ளது. இங்கிருந்து ஐந்து காட்டு யானைகள் தண்ணீர் தேடி பூங்காவை விட்டு வெளியே வந்துள்ளனர்.

பின்னர் ஊமந்தூர் கிராமத்தில் உள்ள லட்சுமண தீர்த்தம் நதி கால்வாய் பகுதிக்கு அந்த யானைக் கூட்டம் வந்தது. தண்ணீரைப் பார்த்த மகிழ்ச்சியில் யானைகள் கால்வாயில் இறங்கி தண்ணீர் குடித்தது.

இதையடுத்து தண்ணீர் குடித்து முடித்துவிட்டு கால்வாயிலிருந்து மேலே ஏறும்போது சறுக்கிச் சறுக்கி மீண்டும் கால்வாயில் விழுந்தன. நீண்ட நேரம் இப்படியே முயற்சி செய்தும் யானைகளால் வெளியே வரமுடியவில்லை.

மேலும், யானைக் கூட்டத்தைப் பார்க்கப் பொதுமக்கள் அங்குக் கூடினர். இதனால் யானைகள் பதற்றமடைந்து அங்கும் அங்கும் ஓடின. பின்னர் கால்வாயிலேயே நடந்து படிக்கட்டுகள் வழியாக ஏறி யானைகள் வெளியே வந்த.

இதையடுத்து ஐந்து யானைகளும் வந்த வழியிலேயே காட்டுப்பகுதிக்குச் சென்றது. யானைகள் கால்வாயிலிருந்து ஏறமுடியாமல் சறுக்கிச் சறுக்கி விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories