இந்தியா

“அதிரடியாக உயர்கிறதா ரயில் கட்டணம்..?” - ரயில்வே துறையின் முடிவால் பயணிகள் அதிர்ச்சி : பின்னணி என்ன?

ரயில் நிலையங்களில் மேம்பாட்டுக் கட்டணங்களைப் பயணிகளிடமிருந்து வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

“அதிரடியாக உயர்கிறதா ரயில் கட்டணம்..?” - ரயில்வே துறையின் முடிவால் பயணிகள் அதிர்ச்சி : பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்று வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தாலும் ஒன்றிய அரசு மவுனம் காத்துவருகிறது.

இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக என தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயணிகளிடமிருந்து கட்டணம் வசூல் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ரயில் கட்டணம் அதிரடியாக உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்பதிவில்லாத பெட்டிகளில் ரூ.10 கூடுதலாக கட்டணம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதேபோல் முன்பதிவு பெட்டி, குளிர்சாதனப் பெட்டி ஆகிய கட்டணங்களிலும் ரூ. 50 வரை கூடுதலாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு மட்டுமே இந்தக் கட்டணம் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் சீசன் டிக்கெட் வசதியை பயன்படுத்தும் பயணிகளுக்கு ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"பயணிகளிடம் இருந்தே கட்டணம் வசூலித்தால், ஏன் தனியாருக்கு ரயில் நிலையங்களை மேம்படுத்த கொடுக்க வேண்டும்" என ஒன்றிய அரசுக்கு சமூக ஆர்வலகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories