இந்தியா

”கிச்சடி நல்லதுதான்; அதுக்காக திருடும் போது சமைக்கிறது வாழ்க்கைக்கே கேடு” - அசாம் போலிஸின் கிண்டல் ட்வீட்

”கிச்சடி நல்லதுதான்; அதுக்காக திருடும் போது சமைக்கிறது வாழ்க்கைக்கே கேடு” - அசாம் போலிஸின் கிண்டல் ட்வீட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் போது திருடர்கள் விநோதமான முறையில் சிக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடந்த சம்பவம் போலிஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெங்ராபுரி எனும் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை ஆட்டையப்போட்டிருக்கிறார். அப்போது பசிக்க ஆரம்பிக்க கிச்சனுக்குள் சென்று கிச்சடி சமைத்து உண்டிருக்கிறார்.

பூட்டிய வீட்டில் இருந்து சத்தம் வருவதை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து உஷாராகியிருக்கிறார்கள். மக்கள் எல்லாம் உஷாராணதை கண்ட திருடன் எஸ்கேப் ஆக முயற்சித்திருக்கிறான். அப்போது அந்த நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் திஸ்பூர் போலிஸாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக அசாம் காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில், கிச்சடி உடல்நலத்திற்கு நல்லதுதான். ஆனாலும் திருட்டு வேலையில் ஈடுபடும் போது வாழ்வுக்கே தீங்கு விளைவிக்கும் என கிண்டலாக பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கைதான திருடனுக்கு கவுகாத்தி போலிஸார் ஹாட் மீல்ஸ் வழங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories