இந்தியா

அதிகரித்த கடன் சுமை.. மனைவி, மகனைக் கொன்று கணவன் தற்கொலை: கேரளாவில் பகீர் சம்பவம்!

கடன் சுமை அதிகரித்ததால் மனைவி மற்றும் மகனை கொலை செய்து குடும்பத் தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்த கடன் சுமை.. மனைவி, மகனைக் கொன்று கணவன் தற்கொலை: கேரளாவில் பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், கொனி நகரம் பகுதியைச் சேர்ந்தவர் சோனி சக்கரியா. இவரது மனைவி ரீனா. இந்த தம்பதியினர் ரியான் என்ற சிறுவனைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இதையடுத்து குவைத் நாட்டில் வேலைபார்த்த போது சக்கரியாவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் கேரளாவிற்கு வந்துள்ளார். பின்னர் இவருக்கு போதிய வருமானம் இல்லாததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளார்.

இதனால் அவருக்குக் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்களுக்குள் அவருக்குப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவி மற்றும் குழந்தைகள் யாரும் அவருடன் பேசாமல் இருந்துள்ளனர். இதற்கிடையில் கடன் தொல்லை நச்சரிப்பால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து சக்கரியாவின் வீடு இரண்டு நாட்களாகப் பூட்டியே இருந்துள்ளது. மேலும் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரீனா மற்றும் சிறுவன் ரியான் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதிகரித்த கடன் சுமை.. மனைவி, மகனைக் கொன்று கணவன் தற்கொலை: கேரளாவில் பகீர் சம்பவம்!

மேலும் மற்றொரு அறையில் சக்காரியா தூக்கில் தொங்கியபடி இருந்திருக்கிறார். இதையடுத்து மூன்று பேரின் உடலையும் பேலிஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில், கடன் நெருக்கடியால் மனைவி மற்றும் மகனைக் கொலை செய்து விட்டு சக்காரியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories