இந்தியா

உ.பிக்கு மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் : வெளியானது 5 மாநில தேர்தல் தேதி - பரபரப்பானது அரசியல் களம்!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தலும் 7 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உ.பிக்கு மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் : வெளியானது 5 மாநில தேர்தல் தேதி - பரபரப்பானது அரசியல் களம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா, ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல்கள் நடைபெறும் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் இன்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்," கொரோனா அதிகரித்து வரும் சூழலில் சுகாதாரத்துறை, உள்துறை வல்லுநர்கள், 5 மாநில சுகாதாரத்துறைச் செயலர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தேர்தலை நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி 3 மாநில தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். மேலும் கொரோனா பரவல் காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு நீட்டிக்கப்படுகிறது.

ஆனால் உத்தர பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டமாகத் தேர்தல் நடைறெ உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 21ம் தேதி மனுத்தாக்கல் கடைசிநாள். மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 24ம் தேதி நடைபெறும்.

பின்னர், பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும். அடுத்து பிப் 14 இரண்டாம் கட்டமாகவும், பிப் 20 மூன்றாம் கட்டமாகவும், பிப்,23 நான்காம் கட்டமாகவும், பிப் 27 ஐந்தாம் கட்டமாகவும், மார்ச் 3 ஆறாம் கட்டமாகவும், மார்ச் 7 ஏழாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறும்.

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெறும். பிப்ரவரி 27ம் தேதி முதல் கட்டமாகவும், மார்ச் 3ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.

அதேபோல் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாகப் பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெறும். இந்த ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories