இந்தியா

மாணவியின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியை : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

பள்ளிக்கு செல்போன் எடுத்துச் சென்ற மாணவியின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மாணவியின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியை : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே உள்ள கனங்கூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், வகுப்பறைக்கு செல்போனை எடுத்துச் சென்ற பள்ளி மாணவியின் ஆடைகளை அவிழ்த்து ஆசிரியை துன்புறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவிற்கு உட்பட்ட கனங்கூர் கிராமத்தில், அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், ஆசிரியையாக பணி செய்து வருபவர் சினேகலதா.

இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்போன் எடுத்து சென்றுள்ளார். வகுப்பறையில் அவர் செல்போனுடன் இருந்ததை பார்த்த ஆசிரியை சினேகலதா மாணவியை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் அந்த மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்தது. ஆனால், தற்போதுதான் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மாணவியிடம் தவறாக நடந்து ஆடைகளை அவிழ்த்த ஆசிரியைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories