இந்தியா

இந்தியாவை மீண்டும் வம்பிழுக்கும் சீனா: எல்லையில் பாலம் கட்டுவது செயற்கைகோள் புகைப்படத்தில் அம்பலம் !

இந்திய எல்லையில் உள்ள ஏரியில் சீனா பாலம் கட்டுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவை மீண்டும் வம்பிழுக்கும் சீனா: எல்லையில் பாலம் கட்டுவது செயற்கைகோள் புகைப்படத்தில் அம்பலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே இருந்து வருகிறது.

கடந்த ஜூன் 15ம் தேதி கூட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்தாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்தது. ஆனால் சீன அரசிடம் இருந்து உரியத் தகவல் வெளியாகவில்லை. இதையடுத்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து சீனா பின்வாங்கிச் சென்றது. இருந்தாலும் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவி வருகிறது. இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியான அருணாசலப்பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைச் சீனா கட்டியிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை சில மாதங்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், இந்தியாவை ஒட்டியுள்ள பாங்காங் ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் சீனா பாலத்தைக் கட்டி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனால் மீண்டும் இந்தியா, சீனா ராணுவத்திற்கு இடையே மோதல் போக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டுவதன் மூலம் தனது ராணுவ கட்டப்பை பலப்படுத்த சீனா முயற்சித்துள்ளது.

ஏற்கனவே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீன ராணுவத்தின் ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி பேசாமல் இருப்பது ஏன் என நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இந்திய எல்லையில் ஒட்டியுள்ள ஏரியில் சீனா பாலம் கட்டி வருவது இந்திய ராணுத்திற்கு நெருக்கடிய ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories