இந்தியா

“பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படும்” : கொரோனா தொற்று அச்சுறுத்தலால் மேற்கு வங்க அரசு உத்தரவு!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

“பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படும்” : கொரோனா தொற்று அச்சுறுத்தலால் மேற்கு வங்க அரசு உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஒமைக்ரான் தொற்று பரவலும் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. இதனால், பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்தியாவில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

* நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள் மூடப்படும். நிர்வாக பணிகள், 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் செயல்படலாம்.

*நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், மிருககாட்சி சாலைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்படும்

*அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும். வீட்டில் இருந்து பணிபுரியும் முறை ஊக்குவிக்கப்பட வேண்டும்.

*நிர்வாக கூட்டங்கள் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட வேண்டும்

*வணிக வளாகங்கள், மார்க்கெட்கள் 50 சதவீத மக்களுடன் செயல்படலாம். இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும்.

*உணவகங்கள், பார்கள், சினிமா தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை வசதியுடன் இரவு 10 மணி வரை செயல்படலாம்

*கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவை அதிகபட்சமாக 200 பேருடன் அல்லது அரங்கில் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் செயல்படலாம்.

*திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை

*இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

*50 சதவீத இருக்கை வசதியுடன் இரவு 7 மணி வரை மட்டுமே உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும்.

*மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் செயல்படும்.

*இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கும், ஒரே இடத்தில் கூடுவதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

*வரும் 5ஆம் தேதி முதல் டெல்லி மற்றும் மும்பைக்கு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும்.

இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories