இந்தியா

ஆண்டின் கடைசி நாளில் புதிய உச்சத்தை எட்டிய Swiggy, Zomato - டெலிவரி பார்ட்னர்களுக்கு சர்ப்ரைஸ்!

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவின் முடிவில், நிமிடத்திற்கு 9,500 உணவு ஆர்டர்கள் என்ற உச்சத்தை எட்டியது ஸ்விக்கி.

ஆண்டின் கடைசி நாளில் புதிய உச்சத்தை எட்டிய Swiggy, Zomato - டெலிவரி பார்ட்னர்களுக்கு சர்ப்ரைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மட்டும் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக Swiggy, Zomato உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனம், தமது புத்தாண்டு ஆர்டர்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைப் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021ன் இறுதி நாளன்று நிமிடத்திற்கு 5,500 உணவு ஆர்டர்கள் என்ற தமது முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவின் முடிவில், நிமிடத்திற்கு 9,500 உணவு ஆர்டர்கள் என்ற உச்சத்தை எட்டியது. இது இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு உணவு டெலிவரிகளில் மிக அதிக எண்ணிக்கை என ஸ்விக்கி கூறுகிறது.

வழக்கமான இரவு உணவு நேரங்களில், வெறும் 30 நிமிடங்களில் மட்டும் 17,600 ஆர்டர்கள் செய்யப்பட்டதாகவும் ஸ்விக்கி நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் டிசம்பர் 31 இரவு ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை 177% உயர்ந்ததாகவும், முதல் முறையாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 80% அதிகரித்ததாகவும் ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று மிகவும் கடினமாக உழைத்த டெலிவரி பார்ட்னர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாதம் முழுவதும் சிறப்பு ஊக்கத்தொகைகள் வழங்கப்படும் எனவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஸ்விக்கி தனது வருடாந்திர உணவு விற்பனை அறிக்கையை (Swiggy's annual StatEATstics) அண்மையில் வெளியிட்டது. அதில், 2021-ஆம் ஆண்டில் ஒரு நிமிடத்துக்கு 115 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, ஸொமேட்டோ நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, புத்தாண்டுக்கு முந்தைய நாளன்று 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் குவிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories