இந்தியா

"பிரியாணிதான் கிங்” : ஒரு நிமிடத்தில் இவ்வளவு பேர் ஆர்டர் செய்கிறார்களா? - Swiggy வெளியிட்ட ரிப்போர்ட்!

இந்தியாவில் 2021ல் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் சிக்கன் பிரியாணி, சமோசா என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"பிரியாணிதான் கிங்” : ஒரு நிமிடத்தில் இவ்வளவு பேர் ஆர்டர் செய்கிறார்களா? - Swiggy வெளியிட்ட ரிப்போர்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக ஸ்விக்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி தனது வருடாந்திர உணவு விற்பனை அறிக்கையை (Swiggy's annual StatEATstics) நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, ஸ்விக்கி மூலம் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஒரு நிமிடத்துக்கு 90 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்ட நிலையில் 2021-ஆம் ஆண்டில் ஒரு நிமிடத்துக்கு 115 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

அதிலும் அதிகமான வாடிக்கையாளர்கள் சிக்கன் பிரியாணியையே ஆர்டர் செய்துள்ளனர். ஸ்விக்கியில் புதிதாக இணைந்த 4.25 லட்சம் வாடிக்கையாளர்களும் சிக்கன் பிரியாணியைத்தான் அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர்.

சென்னை மக்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் பட்டியலிலும் பிரியாணிக்கே முதலிடம் கிடைத்துள்ளது. அடுத்த இடங்களில் சிக்கன் ப்ரைட் ரைஸ், மட்டன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, நெய் பொங்கல் ஆகியவை உள்ளன.

பிரியாணிக்கு அடுத்தபடியாக ஸ்விக்கியில் அதிக கவனம் பெற்றது சமோசா. இந்த ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 50 லட்சம் சமோசாக்களை ஆர்டர் செய்துள்ளனர். சிக்கன் விங்ஸ், பாவ் பாஜியைவிட 6 மடங்கு ஆர்டர் சமோசாவுக்குக் கிடைத்துள்ளது.

இனிப்பு வகைகளில் முதலிடத்தில் ரோஸ் ஃப்ளேவர் குலாப் ஜாமுன் முதலிடத்தில் உள்ளது. 21 லட்சம் பேர் இந்த வகை குலாப் ஜாமுனை ஆர்டர் செய்துள்ளனர். அடுத்ததாக 12.70 லட்சம் ரஸமலாய் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories