இந்தியா

’இந்து ராஷ்டிராவை எதிர்த்தால் கொலை’ என உறுதிமொழி -பள்ளி மாணவர்களை வைத்து பிரிவினையை உண்டாக்கும் இந்துத்வா

உத்தர பிரதேசத்தில் உள்ள பள்ளியில் இந்து ராஷ்டிரம் பெயரில் மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

’இந்து ராஷ்டிராவை எதிர்த்தால் கொலை’ என உறுதிமொழி -பள்ளி மாணவர்களை வைத்து பிரிவினையை உண்டாக்கும் இந்துத்வா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி ஒன்றியத்தில் அமைந்த நாள் தொட்டு பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றவேண்டும் என்பதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தி வருகிறது.

இருப்பினும் அவற்றுக்கெல்லாம் எழும் எதிர்ப்பை அடுத்து பின்வாங்குவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறது பாஜக, ஆர்.எஸ்.எஸ் உட்பட இந்து அமைப்புகள்.

இப்படி இருக்கையில், உத்தர பிரதேசத்தில் உள்ள பள்ளியில் இந்து ராஷ்டிரம் பெயரில் மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில், மீண்டும் அங்கு பாஜகவின் ஆட்சியே நீடிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் பல முண்டியடித்து பணியாற்றி வருகிறதாம்.

அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களிடையே மதநல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்து ராஷ்டிரா பேரில் உறுதிமொழி ஏற்கச் செய்திருக்கின்றன. அதன்படி சோன்பத்ராவில் உள்ள தனியார் பள்ளியான விமலா இன்டர் காலேஜ்ஜில் கடந்த டிசம்பர் 28ம் தேதி இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

அதில், “இந்து ராஷ்டிரா அமைக்கப் போராடு, அதனை எதிர்ப்பவர்களை கொல்ல உயிர் தியாகம் செய்” எனக் கூறி உறுதிமொழி ஏற்றிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோவை அம்மாநிலத்தைச் சேர்ந்த இந்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

இந்த வீடியோவின் கீழ் இந்தி பேசும் மக்களே அதனை கண்டித்து பதிவிட்டிருக்கிறார்கள். மேலும் நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் செயல்படுவோரை மீண்டும் ஆட்சியில் இருத்தக் கூடாது என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories