இந்தியா

சொந்த நிலத்தில் உள்ள மசூதியை 54 ஆண்டுகளாக பராமரிக்கும் இந்து குடும்பம்.. நெகிழ வைக்கும் மத நல்லிணக்கம் !

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மசூதியை இந்து குடும்பம் பராமரித்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த நிலத்தில் உள்ள மசூதியை 54 ஆண்டுகளாக பராமரிக்கும் இந்து குடும்பம்.. நெகிழ வைக்கும் மத நல்லிணக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் பராசத் என்னும் கிராமம் உள்ளது. அந்தப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு பழமையான அமனாதி மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி அமைந்துள்ள பகுதி பார்த்தசாரதி பாசு என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவரிடம் இருந்துள்ளது.

மேலும் அந்த மசூதியை பார்த்தசாரதி மற்றும் அவரது நண்பர்கள்தான் பராமரித்து வந்துள்ளனர். 1964ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து - முஸ்லீம் கலரவத்திற்கு பிறகு பார்த்தசாரதியின் தாத்தா இந்த நிலத்தை வாங்கியுள்ளார்.

ஆனால் வாங்கிய நிலத்தை பார்த்தபோதுதான், அந்த நிலத்தில் மசூதி இருந்தது பார்த்தசாரதியின் தாத்தாவிற்கு தெரியவந்துள்ளது. அந்த மசூதியை இடித்துவிட உறவினர்கள் கூறியபோதும், மசூதியை இடிக்காமல் பார்த்தசாரதியின் தாத்தா தொடர்ந்து பராமரித்து வந்துள்ளார்.

சொந்த நிலத்தில் உள்ள மசூதியை 54 ஆண்டுகளாக பராமரிக்கும் இந்து குடும்பம்.. நெகிழ வைக்கும் மத நல்லிணக்கம் !

அவரைத் தொடர்ந்து பார்த்தசாரதி அந்த மசூதியைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பி மசூதியை புதுப்பித்து ஆசையுடன் பராமரித்து வந்துள்ளார். இன்றும் கூட அந்த மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பார்த்தசாரதி கூறுகையில், இந்த மசூதி எங்கள் குடும்பத்தின் பெருமை. இங்கு வழிபட நாங்களும் நேரம் வழங்குகின்றோம். அதுமட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் அன்று இஸ்லாமிய சகோதர்களுடன் ஒன்றாக பண்டிகையைக் கொண்டாடுகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories