இந்தியா

புத்தாண்டில் நேர்ந்த சோகம்.. வைஷ்ணவ தேவி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு: நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டில் நேர்ந்த சோகம்.. வைஷ்ணவ தேவி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணவ தேவி ஆலயம் உள்ளது. இங்கு புது வருடத்தின் முதல் நாளில் அதிகமான பக்தர்கள் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் 2022 ஆண்டை வரவேற்பதற்காக நேற்று இரவிலிருந்தே இந்த ஆலயத்திற்குப் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

டெல்லி, அரியானா, பஞ்சாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்துள்ளனர். மேலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயன்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் நிதி அறிவித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதி அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் அதிகமான பக்தர்கள் கூடுவதற்கு எப்படி அம்மாநில அரசு அனுமதி அளித்தது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories