இந்தியா

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிப்பு.. ஒப்பந்தத்தை மீறியதா மோடி அரசு?- பின்னணி என்ன?

நாகாலாந்தில் “ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார” சட்டத்தை டிசம்பர் 30ஆம் தேதி முதல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து ஒன்றிய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிப்பு.. ஒப்பந்தத்தை மீறியதா மோடி அரசு?- பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவிலேயே வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் கொந்தளிப்பு நிறைந்த மாநிலங்களில், நாகாலாந்தும் ஒன்று. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராடிவரும் போடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் தொடர் ஆயுதப் போராட்டம் மற்றும் கலகங்கள் அம்மாநிலத்தை கொந்தளிப்பு கொண்டதாக மாற்றியுள்ளது.

மேலும் அவர்களை ஒடுக்குவதற்காக, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை கடந்த 1958ஆம் ஆண்டு அப்போதிருந்த ஒன்றிய அரசு கொண்டுவந்தது. குறிப்பாக, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அம்மாநிலம் முழுவதையும், ‘தொந்தரவு நிறைந்த பகுதி’ என்று அறிவித்தது ஒன்றிய அரசு.

அதனால் 1958ஆம் ஆண்டு முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. பின்னர் 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி நாகா கிளர்ச்சி குழுவின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அமைதி ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. ஆனால் அதன்பின்னரும் இந்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறவில்லை.

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிப்பு.. ஒப்பந்தத்தை மீறியதா மோடி அரசு?- பின்னணி என்ன?

இதனால் மோதல் போக்கு தொடர்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் நாகாலாந்து மக்கள் மீது இந்திய ராணுவம் தவறுதலாக நடத்திய துப்பாக்கிச்சூட்டால், 19 பேர் பலியான சம்பவம் மீண்டும் அம்மாநிலத்தை பற்றியெரிய வைத்திருக்கிறது.

இந்தச் சூழலில் நிலைமையைக் கட்டுப்படுத்தவேண்டிய ஒன்றிய அரசாங்கம், “ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டம்” டிசம்பர் 30ஆம் தேதி முதல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசு அரசிதழில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டம் மூலம் அம்மாநில சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரம் இராணுவத்திடம் இருக்கும்.

இதனால் 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடினால் கைதுசெய்ய முடியும், இச்சட்டத்தை மீறும் நபருக்கு ராணுவம் எச்சரிக்கை கொடுத்தும் இணங்காவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தலாம். சோதனை ஆணை இல்லாமலே எந்த இடத்திலும் சோதனை செய்யலாம் என்பது போன்ற பல்வேறு சிறப்பு அதிகாரம் அந்த சட்டத்திற்கு உண்டு. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அம்மாநில ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகினறனர்.

banner

Related Stories

Related Stories