இந்தியா

ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலி: 5 மாநில தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுகிறதா? அவசர ஆலோசனையில் அதிகாரிகள்!

தேர்தல்களைத் தள்ளி வைக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்த நிலையில் ஆலோசனை.

ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலி: 5 மாநில தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுகிறதா? அவசர ஆலோசனையில் அதிகாரிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தேர்தல்களைத் தள்ளி வைக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

இதையடுத்து, ஐந்து மாநிலத் தேர்தல்கள் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், அனூப் சந்திர பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஐந்து மாநிலத் தேர்தல்களை தள்ளிவைக்க முடியுமா, இல்லையெனில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்பாட்டுத்த கூடுதலாக அமல்படுத்த வேண்டிய கொரோனா விதிமுறைகள் என்னென்ன, கொரோனா கட்டுப்பாடுகள் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வாக்காளர்களின் விகித அடிப்படையில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பது, தேர்தலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பூஸ்டர் தடுப்பூசி திட்டம், தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories