இந்தியா

"பிரச்சாரத்திற்கு தடை - உ.பி தேர்தலை தள்ளிவையுங்கள்" : பிரதமருக்கு அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஒமைக்ரான் பரவல் காரணமாக உத்தர பிரதேச தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

"பிரச்சாரத்திற்கு தடை - உ.பி தேர்தலை தள்ளிவையுங்கள்" : பிரதமருக்கு அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நடைபெறும் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்று வருகிறார்கள்.

இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரங்களே ஒமைக்ரான் பரவலுக்கு வழிவகுத்துவிடுமோ என்று அஞ்சப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவியதற்கு ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.

இதனால் கொரோனா இரண்டாவது அலை பரவியதைப்போல் ஒமைக்ரானை பரவிடாமல் தடுக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கும், பிரதமர் மோடிக்கும் வலியுறுத்தியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் நீதிபதி சேகர் குமார் யாதவ், "ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எனவே உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்.

இல்லை என்றால் கொரோனா இரண்டாவது அலை பரவியதைப் போலவே ஒமைக்ரான் தொற்றும் பரவ வாய்ப்புள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்ளை இணையவழியில் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். எனவே இதுகுறித்து தேர்தல் ஆணையமும், பிரதமர் மோடியும் முடிவெடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories