இந்தியா

இரும்பு பீரோவில் ரூ.150 கோடி.. அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை : ரெய்டில் சிக்கிய தொழிலதிபர்!

உத்தர பிரதேசத்தில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் ரூ.150 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இரும்பு பீரோவில் ரூ.150 கோடி.. அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை : ரெய்டில் சிக்கிய தொழிலதிபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதே மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் என்பவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளைக் குவித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிரடியாகச் சோதனை செய்தனர். மேலும் கான்பூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

அப்போது இரும்பு பீரோவில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இரும்பு பீரோவில் இருந்த பணம் ரூ.150 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலையிலிருந்தே அந்த பணத்தை அதிகாரிகள் எண்ண முடியாமல் எண்ணி வருகின்றனர்.

சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரூ.150 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories