இந்தியா

வெறும் 5 மாதங்கள்.. 100 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்து அசத்திய Start-Up இளைஞர்கள்!

5 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட Zepto நிறுவனம் 100 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.

வெறும் 5 மாதங்கள்.. 100 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்து அசத்திய Start-Up இளைஞர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

5 மாதங்களுக்கு முன்பு 19 வயது மட்டுமே ஆன இரு இளைஞர்களால் துவங்கப்பட்ட Zepto நிறுவனம் 100 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்து வந்த ஆதித் பளிச்சா என்ற 19 வயது இளைஞர் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். பினன்ர் தனது பால்ய நண்பரான கைவல்யா வோஹ்ரா உடன் இணைந்து Zepto எனும் நிறுவனத்தை உருவாக்கினார்.

Zepto நிறுவனம் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் தினசரி தேவைகளுக்கான பொருட்களை ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் தளத்தை உருவாக்கியுள்ளது.

முதலில் மும்பையில் மட்டுமே இருந்த Zepto நிறுவன சேவை, வெறும் 5 மாதங்களில் பெங்களூரு, டெல்லி, உள்ளிட்ட 6 நகரங்களில் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமுடன் முதலீடு செய்த நிலையில் புதிதாக 100 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது Zepto.

குறுகிய காலத்தில் Zepto நிறுவனம் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், தற்போது இந்தியா முழுவதும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories