இந்தியா

“போலி ஆவணங்களைத் தயாரித்து ரயில் இஞ்சின் விற்பனை”: ரயில்வே துறையை மிரளவைத்த பகீர் சம்பவம் - நடந்தது என்ன?

ரயில்வே ஊழியர் ஒருவர் ரயில் இஞ்சினையே மோசடி செய்து விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“போலி ஆவணங்களைத் தயாரித்து ரயில் இஞ்சின் விற்பனை”: ரயில்வே துறையை மிரளவைத்த பகீர் சம்பவம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார் ராஜீவ் ரஞ்சன் ஜா. அவர் கடந்த டிசம்பர் 14ம் தேதி பழமையான ஸ்டீம் ரயில் இஞ்சினை உடைத்து பழுது பார்த்துள்ளார். மேலும் அவருடன் இரண்டு பேர் உதவிக்கு இருந்துள்ளனர்.

இந்நிலையில், இதைப்பார்த்த அதிகாரி ஒருவர் அதிர்ச்சி அடைந்து கேள்வி கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் ரயில் இஞ்சினை உடைத்து டீசலை பணிமனைக்கு அனுப்ப சொன்னதாகக் கூறி, அதற்கான உத்தரவு ஒன்றையும் காண்பித்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து சென்ற அதிகாரி இதுதொடர்பாக நோட்டீஸ் மற்றும் அறிக்கைகளை சரிபார்த்துள்ளார். ஆனால் டீசலை பணிமனைக்கு அனுப்பக்கோரியும், ரயில் இஞ்சினை உடைத்து பழுது பார்க்கக் கோரியும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது தெரிந்தது.

இதனையடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரி தொடர்ந்து விசாரித்ததில், பழமையான ரயில் இஞ்சினை திருடி போலியான ஆவணங்கள் தயாரித்து ரஞ்சன் ஜா விற்பனை செய்திருந்ததை அறிந்து ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து பொறியாளர் ரஞ்சன் ஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 6 ரயில்வே ஊழியர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் பொறியாளர் ரஞ்சன் ஜாவை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories