இந்தியா

நீட் விலக்கு மசோதா.. விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட தி.மு.க எம்.பிகள்!

தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பிகள் முழக்கமிட்டனர்.

நீட் விலக்கு மசோதா.. விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட தி.மு.க எம்.பிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு காணல் நீராகிவிட்டது. மேலும் மருத்துவர் கனவு நிறைவேறாததால் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.

எனவே மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக தி.மு.க அரசு வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது.

மேலும் ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு விலக்கு குறித்து சட்டப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

பின்னர் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியது. பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

பின்னர் பிற்பகலில் மீண்டும் அவை தொடங்கிய உடன் தி.மு.க எம்.பி.க்கள், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் உள்ளார். இது குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால், விவாதிக்க அனுமதி அளிக்காததை அடுத்து தி.மு.க எம்.பி.கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவையின் மையப்பகுதிக்கு வந்து தமிழில் முழக்கமிட்டனர்.

banner

Related Stories

Related Stories