இந்தியா

”காசு கொடுத்தா போதும்; ஷார்ப்பா வேலை முடியும்” -லஞ்சம் வாங்குவதை பெருமையாக பேசி வசமாக சிக்கிய உ.பி போலிஸ்

போலிஸார் லஞ்சம் வாங்குவதை பெருமையாக மாணவர்கள் முன்னிலையில் உத்தர பிரதேச போலிஸின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”காசு கொடுத்தா போதும்; ஷார்ப்பா வேலை முடியும்” -லஞ்சம் வாங்குவதை பெருமையாக பேசி வசமாக சிக்கிய உ.பி போலிஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த போலிஸார் பேசியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

அவர் பேசியதாவது, “காவல்துறையை தவிர வேறு எந்த துறையும் சிறப்பாக செயல்படாது. மற்ற துறையில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வேலை நடக்காது. ஆனால், போலிஸிடம் பணம் கொடுத்தால் கச்சிதமாக நடத்திக்காட்டுவார்கள்.

ஆசிரியர்களை பாருங்கள், கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தார்கள். ஆனால் நாங்கள் அப்படியா? சாதாரண நாட்களை காட்டிலும் இந்த பெருந்தொற்று காலத்தில் அதிகளவிலேயே பணியாற்றி வருகிறோம்.” எனக் கூறியுள்ளார்.

அந்த போலிஸின் பேச்சு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினர் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடுவதை போலிஸாரே பட்டவர்த்தனமாக பெருமை பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பிகாபுர் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளதாக உன்னாவ் போலிஸ் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories