இந்தியா

ஒருவழியா கடையைத் திறந்த ஓலா நிறுவனம்; முதல் டெலிவரியிலேயே வாடிக்கையாளர்கள் அதிருப்தி; என்ன காரணம்?

வெகுநாட்களாக காத்திருந்த தனது வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றும் விதமாக முதற்கட்டமாக 100 மின்சார வாகனங்களை டெலிவரி செய்துள்ளது ஓலா நிறுவனம்.

ஒருவழியா கடையைத் திறந்த ஓலா நிறுவனம்; முதல் டெலிவரியிலேயே வாடிக்கையாளர்கள் அதிருப்தி; என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக்காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணமாக பெட்ரோல், டீசலின் விலையேற்றத்தை குறிப்பிடுகின்றனர்.

மக்களின் தேவையை உணர்ந்த நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கின. அதன்படி பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட Ather நிறுவனம் இந்தியா முழுவதிலும் குறிப்பிடத்தக்க வகையில் தனது கிளையை பரப்பி அதன் மின்சார வாகனக்களை சந்தையில் இறக்கியுள்ளது.

Atherக்கு போட்டியாக டாக்சி நிறுவனமாக இருந்த OLAவும் மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்கியதோடு பல கவர்ச்சிகரமாக அம்சங்களை கொண்டதாக தங்களது வாகனங்கள் இருக்கும் என்றும் தெரிவித்தன.

அதன் தொடர்ச்சியாக Ola S1, S1 ப்ளஸ் என இருவகைகளில் சுமார் 10 கண்கவர் நிறங்களில் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதற்கு முன்பணமாக ரூ.499-ஐ கட்டிய வாடிக்கையாளர்கள் ஓலா ஸ்கூட்டரின் விநியோகத்திற்காக வெகு நாட்களாக காத்திருந்தனர்.

இந்த நிலையில், முதற்கட்டமாக 100 மின்சார வாகனங்களை விநியோகிக்கும் பணி கடந்த புதனன்று (டிச.,15) சென்னை மற்றும் பெங்களூருவில் தொடங்கியது.

ஒருவழியாக விநியோகத்தை தொடங்கிவிட்டதாக Economic times செய்தித்தாளுக்கு வாடிக்கையாளர்கள் பேட்டியளித்துள்ளனர். இருப்பினும், ஓலா ஸ்கூட்டரை அறிமுகம் செய்தபோது குறிப்பிட்ட சில அம்சங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள வாகனங்களை இல்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Mobile app, bluetooth, hill hold, cruise control, voice commands போன்ற அம்சங்கள் ஒரு மாதத்திற்கு பிறகுதான் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதால் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக பேசியுள்ள அந்நிறுவனத்தின் மூத்த விளம்பர அதிகாரி வருண் துபே, கூடிய விரைவில் விடுபட்ட அம்சங்கள் அனைத்தும் air update மூலம் செயல்படுத்தப்படும். மேலும் அடுத்தடுத்து ஸ்கூட்டர்களை விநியோகிப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories