இந்தியா

‘போதும்பா சாமி உங்க அரசியல்’ : பா.ஜ.க.,வின் மோசமான நிலைப்பாடுகளால் அரசியலிலிருந்து வெளியேறிய மெட்ரோ மேன்!

அரசியலிலிருந்து முழுமையாக விலகுவதாக மெட்ரோ மேன் தெரிவித்துள்ளார்.

‘போதும்பா சாமி உங்க அரசியல்’ : பா.ஜ.க.,வின் மோசமான நிலைப்பாடுகளால் அரசியலிலிருந்து வெளியேறிய மெட்ரோ மேன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் நடத்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க ஒரு தொகுதி கூட பெற்றி பெற முடியாமல் படுதோல்வியடைந்தது. இந்த தேர்தலில் எப்படியாது அதிக தொகுதிகளை வெற்றி பெற வேண்டும் பணபலத்துடன் பிரபலங்கள் பலரையும் பா.ஜ.கவில் இணையவைத்துத் தேர்தலைச் சந்தித்தது.

கேரளாவில் மக்கள் எல்லோருக்கும் அன்போடு மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் என்பவரை பா.ஜ.க இணைத்துக்கொண்டது. இவர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். இந்நிகழ்வை பா.ஜ.க தேர்தல் அரசியலுக்காக பிரம்மாண்டமாக நடத்தியது. இவரின் இணைப்பை அடுத்து பா.ஜ.கவில் இணைந்தவுடன் இவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற பேச்சும் அடிபட்டது.

இவரின் பிரபலத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெற நினைத்தது. ஆனால் ஸ்ரீதரன் போட்டியிட்ட பாலக்காடு தொகுதியிலேயே அவர் படுதோல்வியடைந்தனர். 3859 வாக்குகள் மட்டுமே மெட்ரோ மேன் ஸ்ரீதரனால் பெற முடிந்தது.

‘போதும்பா சாமி உங்க அரசியல்’ : பா.ஜ.க.,வின் மோசமான நிலைப்பாடுகளால் அரசியலிலிருந்து வெளியேறிய மெட்ரோ மேன்!

பின்னர் தொடர்ந்து பா.ஜ.கவில் செயல்பட்டு வந்த நிலையில் தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம், “நான் தீவிர அரசியலில் இனி ஈடுபடப்போவதில்லை. அரசியலைக் கைவிடக் காரணம் எனக்கு அதில் விருப்பமில்லை. நான் எப்போதும் அரசியல்வாதியாக இருந்ததில்லை. தேர்தலில் முதல்முறையாகப் போட்டிப்போட்டுத் தோற்றது வருத்தமாக இருந்தது. வெற்றி பெற்றிருந்தாலும் பயன் இருந்திருக்கப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories