இந்தியா

ஆன்லைன் வகுப்பின்போது வெடித்த செல்போன்.. 8ஆம் வகுப்பு மாணவனுக்கு ஏற்பட்ட கதி.. நடந்தது என்ன?

ஆன்லைன் வகுப்பில் செல்போன் வெடித்ததில் சிறுவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வகுப்பின்போது வெடித்த செல்போன்.. 8ஆம் வகுப்பு மாணவனுக்கு ஏற்பட்ட கதி.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், சந்த்குய்யா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பிரகாஷ் பதவுரியா. சிறுவனான ராம்பிரகாஷ் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்னும் முழுமையாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பே நடைபெற்று வருகிறது.

இதனால் ராம்பிரகாஷ் வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைன் வகுப்பு வடித்து வருகிறார். இந்நிலையில் ராம்பிரகாஷ் பெற்றோர்கள் வீட்டில் இல்லா நேரத்தில் ஆன்லைன் வகுப்பு வாயிலாக கல்வி கற்றுக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென செல்போன் வெடித்துள்ளது. இதில் சிறுவனின் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வீட்டிற்கு வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறுவன் ராம்பிரகாச்ஷுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories