2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளாகியும் ஓயாது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. டெல்டா, டெல்டா ப்ளஸ் என தனது உருமாற்றம் அடைந்து வந்த நிலையில் ஒமைக்ரான் என்ற மரபணு மாற்றமடைந்த வைரஸாக கொரோனா பரவி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வகை தொற்று உலகின் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த ஒமைக்ரான் வகை தொற்று குறித்து மருத்துவ ஆய்வாளர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
அவ்வகையில், ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், டெல்டா வகை கொரோனாவை விட 70 மடங்கு அதி வேகமாக இந்த ஒமைக்ரான் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்டா அளவுக்கான பாதிப்பை ஒமைக்ரான் தொற்று ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளது.
மேலும், டெல்டா மாறுபாட்டை போல நுரையீரலில் தாக்கியதை மரணத்தை ஏற்படுத்தும் விதமாக இல்லாமல் 10 மடங்கு குறைவான பாதிப்பையே இந்த ஒமைக்ரான் தொற்று ஏற்படுத்தும் என்றும் மெதுவாகவே நுரையீரலை தாக்கும் வகையில் இருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.