இந்தியா

திருமண நிதி உதவிக்காக சகோதரியை கல்யாணம் செய்து கொண்ட சகோதரன்... உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அரசு உதவிக்காகச் சொந்த சகோதரியையே சகோதரன் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிதி உதவிக்காக சகோதரியை கல்யாணம் செய்து கொண்ட சகோதரன்... உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தில் திருமண உதவி பெற சொந்த சகோதரியை, சகோதரனே திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், துந்தலா பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வரின் திருமண உதவி திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் 51 திருமண ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த ஜோடிகளுக்கு ரூ.35 ஆயிரம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதையடுத்து இந்த திருமணம் குறித்த படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தது. திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடியில் சகோதர, சகோதரி என்ற உண்மையை கிராம மக்கள் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக்கிராமத்திற்குச் சென்ற அதிகாரிகள் அவர்களின் ஆதார் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிதி உதவிக்காகச் சொந்த சகோதர, சகோதரிகளே திருமணம் செய்துகொண்ட கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories