இந்தியா

இந்தியாவில் மதுப்பழக்கம் கொண்டவர்கள் எவ்வளவு பேர்..? - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் 16 கோடி பேருக்கு மதுப்பழக்கம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மதுப்பழக்கம் கொண்டவர்கள் எவ்வளவு பேர்..? - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மதுபானங்கள் விற்பனை, மது அருந்துவோர் குறித்து யு.பி.எஸ் என்ற நிறுவனம் அண்மையில் 36 மாநிலங்களில் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வு முடிவில் இந்தியாவில் மட்டும் 16 கோடி பேர் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 7.5% பேர் பெண்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, சிக்கிம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் மது அருந்துகிறார்கள்.

அதேபோல், கள் மற்றும் நாட்டுச் சாராய விற்பனையில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் 16 கோடி பேருக்கு மதுப் பழக்கம் உள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories